Categories
உலக செய்திகள்

9 ராணுவ வீரர்கள் தொடர்ந்து தற்கொலை…. முதன்மை காரணம் என்ன…? பகீர் தகவல்…!!

ஆஸ்திரேலியா ராணுவம் போர்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய ராணுவம் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் கொன்றதாக ரகசிய ஆவணங்கள் அம்பலமாகியுள்ளன. இந்த விவகாத்தை தற்போது ஆஸ்திரேலிய அரசாங்கம் விசாரணையை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த மூன்று வார இடைவெளியில் 9 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ள தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் நிராயுதபாணியான ஆண்களையும் பெண்களின் கொல்லும்ம் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் வெளியாகியுள்ளதால் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் 39 கைதிகள் மற்றும் அப்பாவி மக்களை கொன்றிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் 465 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கை வெளியாகி உள்ளது.

நான்கு வருடங்கள் விரிவான விசாரணை மற்றும் ஆய்வுக்குப் பின்னரே 2015-2016 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய வீரர்களின் இந்த கொடூர செயல் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது. இருப்பினும் தற்போது ஆப்கானிஸ்தான் மக்களை கொன்று போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தற்போது வரிசையாக தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்பதில் உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |