நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளின் காரணமாக ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தற்போது பெகாஸஸ் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த எட்டு நாட்களாக இந்த விவகாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடிய உடன், இன்று காலை காப்பீடு மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து மீண்டும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் தங்களது முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்தன. இதையடுத்து ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 11 மணி வரை அவை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.