Categories
பல்சுவை

9 வருடங்கள்…. உரிமையாளருக்காக காத்திருந்த நாய்…. இப்படி ஒரு பாசமா….?

ஜப்பான் நாட்டில் ‌ கடந்த 1924-ஆம் ஆண்டு யூனோ என்பவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் செல்லப்பிராணியாக ஹச்சிக்கோ என்ற ஒரு நாயை வளர்த்துள்ளார். இந்த நாய் யூனோ மீது மிகவும் பாசமாக இருந்துள்ளது. இந்த நாய் யூனோ கல்லூரிக்கு செல்லும்போது தினமும் ரயில்வே நிலையம் வரை செல்லும். அதன்பிறகு கல்லூரி முடிந்து யூனோ திரும்பி வரும்போது நாய் மீண்டும் ரயில் நிலையத்தில் அவருக்காக காத்திருக்கும். இந்நிலையில் யூனோ கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மயங்கி அங்கேயே உயிரிழந்துவிட்டார்.

இவர் உயிரிழந்தது தெரியாததால் நாய் ரயில்வே நிலையத்தில் எப்போதும் போல அவருக்காகக் காத்திருந்தது. ஆனால் யூனோ வராததால் 2 மணி நேரத்திற்குப் பிறகு வீட்டிற்குச் சென்றுள்ளது. இதேப்போன்று தினம்தோறும் நாய் ரயில்வே நிலையத்தில் யூனோவுக்காக காத்திருந்தது. இதேபோன்று 9 வருடங்கள் யூனோவுக்காக நாய் ரயில்வே நிலையத்திற்கு சென்று காத்திருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 1935-ம் ஆண்டு நாய் வயதாகி உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்த நாய் இறக்கும் வரை தன்னுடைய உரிமையாளருக்காக காத்திருந்தது. இதன் காரணமாக ஜப்பானில் ஹச்சிக்கோ நாய்க்கு சிலை வைத்துள்ளனர்.

Categories

Tech |