9-11 ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோன பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் 9 முதல் 11 வரை மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் இன்று முதல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.மாணவர்களுக்கு பாஸ் போடப்பட்டாலும் கற்பித்தல் அறிவு அவர்களுக்கு வேண்டும் என்பதால் இன்று முதல் அவர்களுக்கு பள்ளி வழக்கமாக செயல்படும். எனவே மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.