அமெரிக்காவில் 9.11_ஆம் தேதி 9.11 மணிக்கு 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையுடன் குழந்தை பிறந்தது அனைவரையும் வியப்படையவைத்துள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு 11_ஆம் தேதி செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான வாஷிங்டன் பென்டகன் , நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது பயங்கரவாதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோத செய்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 3,000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதிபயங்கர கொடூர தாக்குதலாக பார்க்கப்பட்ட இந்த துயரம் உலக நாடுகளையே உலுக்கியது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த தாக்குதலின் நினைவு தினம் அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும். கடந்த 11_ஆம் தேதி இந்த தாக்குதலின் 18-வது நினைவு தினம் அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.அந்நாளில் அங்குள்ள டென்னிசி மாகாணத்தில் உள்ள ஜெர்மன்டவுன் நகரின் மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கேமட்ரியோன் மூர் பிரவுன் என்ற கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
அதில் என்ன ஒற்றுமை என்றால் இரவு 9.11 மணிக்கு பிறந்த அந்த குழந்தை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடை இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.இன்னும் மேலே சென்று பார்த்தோமானால் இது ஒரு அபூர்வ நிகழ்வாக கருத தோணும் என்னெவென்றால் 9_ஆவது மாதம் 11_ஆம் தேதி , இரவு 9.11 மணி , 9 பவுண்ட் 11 அவுன்ஸ் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இந்த குழந்தைக்கு பெற்றோர்கள் ”கிறிஸ்டினா” என்று பெயர் சூட்டியுள்ளனர்.