Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா வாரங்கல்லில் 3 வயது குழந்தை உட்பட கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுப்பு… !

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் கிணற்றில் இருந்து 9 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மசூத், அவரது மனைவி நிஷா, மகள் புஷ்ரா, புஷ்ராவின் 3 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் வாரங்கல்லில் பணிபுரிந்து வந்தனர். தெலங்கானா மனிதன் வாரங்கள் என்ற நகர் அருகே சந்தோஷ் என்பவர் கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் மேற்குவங்கத்தை மசூத் மற்றும் அவரது குடும்பத்தினர் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர் தனது மனைவி, மகள் உள்ளிட்ட 6 பேருடன் வாரங்கல்லில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அவர் தொழ்ற்சாலை அருகில் உள்ள கிடங்கில் தங்கி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை முதல் தொழிற்சாலையில் வசித்து வந்த மசூத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட பீகார் மற்றும் திரிபுரா மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை காணவில்லை என்று தொழிற்சாலை உரிமையாளர் சந்தோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தொழிற்சாலைக்கு அருகில் ஒரு பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மாலை மசூத் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டெடுக்கப்பட்டனர். அந்த சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இன்று காலை காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து காணாமல் போன தொழிலாளர்கள் சிலர் மசூத் குடும்பத்தை கொலை செய்து விட்டு சென்றனரா? எனபது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இன்று காலை மேலும் பல சடலங்கள் மிதக்க தொடங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அவர்கள் பீகார் மற்றும் திருப்பூரை மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |