அமெரிக்காவில் அதிவேகத்தில் சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் என்ற சாலையில் அதிவேகத்தில் வந்த வாகனம் ஒன்று சிக்னலில் நிற்காமல் சென்றது. அதன்பின்பு, கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த கொடூர விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 9 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 6 நபர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.