புதுவையில் செப்டம்பர் மாதம் முழுவதும் தினமும் 9 மணி நேரத்திற்கு முழு ஊரடங்கு என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஊரடங்கு தளர்வுகளில் பல்வேறு தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாநில அரசாங்கமும் இதுகுறித்து முடிவுகள் அறிவிக்கின்றன.
தமிழக அரசாங்கம் இன்று மாலை இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி புதுவை மாநிலத்திற்கு இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில்,
புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் முழுவதும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி நகரம் மற்றும் புறநகரில் ஒரு வார கால ஊரடங்கு மறுபரிசீலனை செய்யப்படும், மேலும் ஊரடங்கு தளர்வு குறித்து நாளை முடிவெடுக்கப் போவதாகவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.