Categories
உலக செய்திகள் கொரோனா

ஒன்பது மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்…!!

மனித உடலின் தோல் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் 9 மணி நேரம் உயிர் வாழும் என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் தொற்று வியாதி நிறுவனமான சிகிச்சைக்காக ஆய்வு இதழில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மனித உடலில் தோள் மேல் பரப்பில் தங்கும் வைரஸ் இரண்டு மணி நேரத்திற்குள் காய்ச்சலை உண்டாக்கும் திறன் கொண்டது. மேலும் மனிதனின் தோல் பரப்பில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ் எளிதில் அடுத்தவர்களுக்கு பரவும் ஆபத்தை கொண்டது என்று அந்த இதழ் எச்சரித்திருக்கிறது.

இறந்த  ஒருவரின் சடலத்தின் தோல் பரப்பை ஒருநாள் கழித்த நிலையில் ஆய்வு செய்தபோது கொரோனா வைரஸ் செயல்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

Categories

Tech |