ஒன்பது இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கம் கடை வைத்து நடத்தி வருபவர் மணிகண்டன். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் கடையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் முடியாததால் அவர்கள் மேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்கள் மீது பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் 9 சக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசம் ஆகியது. இந்த சம்பவம் குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.