Categories
உலக செய்திகள்

இனி விமானங்கள் வரலாம்…. தடைகள் ரத்து…. பிரபல நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஹாங்காங் நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்க பட்டிருந்த தடைய நீக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஹாங்காங் நாட்டிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஹாங்காங் தலைவர் கேரி லாம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 9 நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில். “ஹாங்காங்கை விட விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளிலும் மற்றும் அங்கிருந்து வரும் பெரும்பாலானோருக்கும் கொரோனா பதிப்பு இல்லை. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் காலம் வருகிற 1ம் தேதி முதல் ஏழு நாட்களாக குறைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |