திருச்சியில் கறி விருந்து நிகழ்ச்சிக்கு செல்லும் போது டயர் வெடித்து கிணற்றில் கவிழ்ந்ததில் 08 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர் பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 09 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.