பிரிட்டனில் 9 இடங்களில் பாலியல் தாக்குதல் செய்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பிரிட்டனில் உள்ள ஒரு பூங்காவில் மர்ம நபர் ஒருவர் காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை 9 பாலியல் தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார். அந்த மர்ம நபர் தலையில் முக்காடு போட்டு ஒரு சைக்கிள் ஓட்டி வந்து ஒன்பது இடங்களில் இந்த தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு இதுபற்றி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.விசாரித்ததில் 9 இடங்களில் பாலியல் தாக்குதல் நடத்திய நபர் ஒருவரே என்று கண்டறிந்தனர்.
அதன்படி விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து விசாரணை அதிகாரி பீட்டர் காலின்ஸ் தெரிவித்ததாவது, பூங்காவை தவறாமல் பயன்படுத்தும் உள்ளூர்வாசிகளுக்கு இந்த சம்பவம் கவலை அளிப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகிறோம். மேலும் பூங்காவை சுற்றிலும் ரோந்து பணிகளுக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இச்சம்பவத்தை கண்ட எவரேனும் முன்வந்து சாட்சி சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.