கடைக்கு சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டின் அருகில் இருந்த பெட்டி கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போது அதே ஊரில் வசிக்கும் பிரபா, கோபி, அருண் பார்த்திபன் ஆகிய 4 பேரும் கைக்குட்டையில் மயக்க மருந்து தடவி சிறுமியின் முகத்தில் வைத்துள்ளனர்.
இதனால் சிறுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். பிறகு பெருமாள் கோவில் பின்புறத்தில் வைத்து நான்கு வாலிபர்களும் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமியிடம் வாலிபர்கள் உன்னை நாங்கள் கெடுத்து விட்டோம் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
பின்னர் சிறுமியை அவர் வசிக்கும் பகுதியில் விட்டுவிட்டு வாலிபர்கள் தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக சிறுமி தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்தப் புகாரின் அடிப்படையில் நான்கு வாலிபர்களையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.