Categories
உலக செய்திகள்

மைதானத்தில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

இங்கிலாந்தில் கால்பந்து பயிற்சி மேற்கொண்டிருந்த சிறுவன், மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள லங்காஷயர் என்ற மாகாணத்தில் இருக்கும் பிளாக்பூல் என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு திறந்த வெளி மைதானத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனியார் கால்பந்து பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது திடீரென்று சிறுவன் மீது இடி மின்னல் தாக்கியுள்ளது.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவனை மீட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டும்  பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார். இச்சம்பவத்தால் சிறுவனின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Categories

Tech |