யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் கோப்பையை கைவிட்டதால் இங்கிலாந்து வீரர்களுக்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஒரு சிறுவன் எழுதிய கடிதம் கலங்க செய்துள்ளது.
யூரோ கால்பந்தின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால், நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்ட மூவரும் கருப்பினத்தவர்கள்.
எனவே அவர்களை கடுமையாக விமர்சித்தனர். இதில் முக்கியமாக பிரிட்டன் ராணியிடமிருந்து MBE பட்டம் பெற்ற மார்கஸ் ரஷ்போர்ட் தான் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளானார். இவர் பல மக்களுக்கு சேவைகள் செய்திருக்கிறார். எனவே நாட்டில் உள்ள சிறுவர்கள் ஆயிரக்கணக்கானோர் இணையதளங்களில் இவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் Dexter Rosier என்ற 9 வயதுடைய சிறுவன், தான் ஹீரோவாக நினைக்கும் மார்கஸ் ரஷ்போர்ட்டிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இது பலரையும் நெகிழச் செய்துள்ளது. இக்கடிதத்தை நேரலையில் படித்த பிரபல பத்திரிக்கையாளர் நேரலையில் கண் கலங்கினார். அந்த கடிதத்தில், சிறுவன் எழுதியிருப்பதாவது, டியர் மார்கஸ் ரஷ்போர்ட், கடந்த வருடத்தில் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்து என்னை கவர்ந்தீர்கள்.
நேற்று, அனைத்து விமர்சனங்களையும் அமைதியாக எதிர்கொண்டு மீண்டும் என்னை நீங்கள் பிரமிப்படைய செய்துள்ளீர்கள். உங்களை எண்ணி பெருமையடைகிறேன். நீங்கள் என்றும் எங்களின் நாயகன் என்று சிறுவன் எழுதியிருக்கிறார். எனவே இங்கிலாந்து நாட்டின் முகம் இச்சிறுவனின் கடிதத்தில் வெளிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.