இலங்கையில் தாய் தனது 9 வயது மகனுக்கு அயன்பாக்ஸ்சால் (iron box) சூடு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று தாய் தனது 9 வயது மகனிடம் குர்ஆன் கற்பதற்கு மதரசாவுக்கு செல்லுமாறு கூறிஉள்ளார். சிறுவன் தூக்கத்தில் இருந்ததால் மறுப்பு தெரிவித்து இருக்கிறான்.
இருந்த போதும் சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் ஓத மதராசாவுக்கு செல்லுமாறு வற்புறுத்திய நிலையில் சிறுவன் அங்கு இருந்த அயன்பாக்ஸ் எடுத்து தூக்கி எறிந்துள்ளான்.
இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் அயன்பாக்ஸ்சை சூடாக்கி சிறுவனின் உடம்பின் சூடு வைத்துள்ளார். இதனால் அலறி துடித்துள்ளான் இருப்பினும் விடாமல் சிறுவன் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்துள்ளார் இதில் அவன் படுகாயமடைந்தான்.
கடந்த 3 நாட்களாக எந்தவொரு சிகிச்சையும் சிறுவனுக்கு கொடுக்காமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த சிறுவன் படிக்கும் பள்ளிக்கு தெரியவர அவனின் ஆசிரியர்கள் இந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காத்தான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதனை தொடர்ந்து போலீஸ் வழக்கு பதிவு செய்து தாயிடம் விசாரணை செய்து வருகிறது.