Categories
இந்திய சினிமா சினிமா

9 ஆண்டுகள் கழித்து ஓவியா … யாருக்கும் என்னைத் தெரியாது ..!!

நடிகை  ஓவியா தனது தாய்மொழியான   மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

கேரளாவை சேர்ந்த ஓவியா மலையாள திரையுலகில் தான்  முதன்முதலாக அறிமுகமானார். அவர் அங்கு மூன்று படங்கள் நடித்த பிறகு  தமிழில் முதன்முதலாக நாளை நமதே என்ற படத்தில் நடித்தார். அதன்பின் விமல் நடிப்பில் வெளியான “களவாணி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் பல  திரைப்படங்களில் நடித்து தமிழக மக்கள் மனதில்  இடம் பிடித்தார் .

Image result for oviya

அதன்பின் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் . குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா அளவுக்கு பிரபலமானவர்  யாரும் இல்லை என்று கூட சொல்லலாம். எனினும் பிக்பாஸில் கொண்ட அறிமுகத்தைகே கொண்டு பலரும் திரைத்துறை வாய்ப்புகளை பெற்றனர் . ஆனால் ஓவியா , தனக்கு வந்த திரைப்பட வாய்ப்புகளை வாய்ப்புகளையும் ஏற்க மறுத்தார் . 

Image result for oviya

 

மேலும்  , கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துவந்த ஓவியா 2011-ம் ஆண்டுக்கு பின் தனது  தாய்மொழியான மலையாளத்தில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. தற்போது அவர் ஒன்பது ஆண்டுகள் கழித்து மலையாளப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து ஓவியா  “எனக்கு இது அறிமுகப்படம் போல உள்ளது. இங்கு யாருக்கும் என்னைத் தெரியாது” என்று பேட்டியில் கூறியுள்ளார்.

 

 

 

 

 

Categories

Tech |