சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 கர்ப்பிணி பெண்கள் குணமடைந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் மருத்துவமனையில் 24 கர்ப்பிணி பெண்கள் கொரோனா அறிகுறியுடன் அணுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு நடத்திய சோதனையில் 20க்கும் மேற்பட்ட கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 9 பெண்களுக்கு குழந்தை பிறந்தது.அந்த குழந்தைகளில் இரண்டு பேருக்கு பிறந்த முதல் நாளிலேயே கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 9 இளம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கொரோனோவில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களை மருத்துவர்கள் வழி அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் கணிசமான அளவில் நாள்தோறும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.