ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த சமயத்தில், ஊரடங்கினால், பலரது பொருளாதாரம் சரிந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்ததால்,
அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டதிலிருந்து அதிக அளவில், அதீத வேகத்தில், கொரோனா பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அலுவலகங்கள் , உணவு கூடங்கள் உள்ளிட்ட தளர்வுகளால் கொரோனா அதிகரித்துள்ளதாகவும், உட்புற அரங்குகளில் 90 சதவிகிதம் பரவுவதாகவும் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் இது ஒரு Super Spreading Event என்று குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலரோ அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு பொதுக் கூட்டங்களுக்கும்,அரசியல் நிகழ்வுகளுக்கும், தியேட்டர்கள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு மேலும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அப்போது பாதிப்பு எப்படி இருக்குமோ? என்று கவலை தெரிவித்துள்ளனர்.