Categories
மாநில செய்திகள்

90% கொரோனா மரணங்கள், 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் – மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 90% கொரோனா மரணங்கள், 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் என்று மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்..

தமிழகம் முழுவதும் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.. இந்த மெகா முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்த  முகாம்களில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநிலம் முழுவதும் 24,760 இடங்களில் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, 33.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.. மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவதற்கான அறிகுறி காணப்படுகிறது.. கடந்த 2 மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கீட்டில் 90% கொரோனா மரணங்கள், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் என்று கூறினார்..

Categories

Tech |