அதிமுக பற்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அலுவலகம் கட்டுவதற்காக 90 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய இடம் எங்கே என்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கட்சி அலுவலகத்திற்கு 1.60 கோடி ரூபாய்க்கே நிலம் பேசப்பட்டதாகவும், 90 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு முழு பணத்தை தராமல் பத்திரம் பதிவாகவில்லை என்றும், 5 வருடத்திற்கு மேல் ஆனதால் இடத்தின் மதிப்பு அதிகரித்து ஒரு சென்ட் 13 லட்சம் என தலைமை விற்பனை செய்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. அதனால் ஆத்திரமடைந்த மக்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.