நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டி சேர்ந்த பெருமாத்தாள் என்ற தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களில் இருவரை டெபாசிட்டை இழக்க செய்துள்ளார்.
இதைபோல் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் சாருகலா என்ற 22 வயது பொறியியல் பட்டதாரி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் 3336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் வாக்கு எண்ணிக்கை மூன்று வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க செய்துள்ளார்.