Categories
உலக செய்திகள்

90 வருடங்களுக்கு பின் தெரியவந்த உண்மை.. தாத்தாவின் கதையில் நீடிக்கும் மர்மம்..? பேத்தியின் தொடர் தேடுதல்..!!

அமெரிக்காவில் தாத்தாவின் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்டை பேத்தி 90 வருடங்கள் கழித்து கண்டுபிடித்துள்ளார். 

அமெரிக்காவில் லவ்சியானா என்ற மாகாணத்தில் வசித்த தம்பதி லேஸ்ஸி-பெர்சி டென்பர்.  இவர்கள் கடந்த 1912ம் வருடத்தில் தங்கள் 4 வயது குழந்தை ராபர்ட் கிளாரன்ஸ் பாபி டென்பரை மீன்பிடிக்க அழைத்துச் சென்றபோது சிறுவன் பாபி மாயமானார். அதன் பிறகு பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தை நாடி, அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இச்சம்பவம் நடந்து சுமார் 8 மாதங்களுக்கு பின்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது வால்டர் என்ற நபர் 5 வயது சிறுவன் ஒருவனுடன் வந்துள்ளார். அந்த சிறுவன் யார் என்று அவரிடம் விசாரித்ததில் அவர் தனக்குரிய நிலத்தில் வேலை செய்யும் ஜூலியா என்பவரின் மகன் சார்லஸ் ப்ரூஸ் என்று கூறியுள்ளார்.

எனினும் காவல்துறையினருக்கு, பல மாதங்களுக்கு முன்பு மாயமான பாபி போன்று அந்த சிறுவன் தெரிந்ததால் வால்டர் மற்றும் அந்த சிறுவன், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போதும் வால்டர் அது ஜூலியாவின் மகன் தான் என்று உறுதியாக கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை நம்பாமல் சிறுவனை தொலைத்த லேஸ்ஸி-டன்பர் தம்பதிக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

லேஸ்ஸி காவல்நிலையத்திற்கு வந்தவுடன் சிறுவன் ஓடிச்சென்று “அம்மா”என்று கட்டி அணைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரைப் பார்த்தவுடன் சிறுவன் ஒருவிதமாக குழம்பிப்போய் நின்றதாக சில செய்தித்தாள்கள் தெரிவித்திருக்கிறது. அந்த காவல் நிலையத்தில் சரியாக என்ன நடந்தது என்று தெரிவிக்கப்படவில்லை. எனினும் லேஸ்ஸியை கண்டவுடன் அந்த சிறுவன் முகத்தில் மாற்றம் ஏற்பட்டதை பார்த்து காவல்துறையினர் அந்த சிறுவன் மாயமான பாபி தான் என்று முடிவெடுத்து வால்டரை கடத்தல் வழக்கில் கைது செய்து விட்டனர்.

எனினும் வால்டர் திரும்பத் திரும்ப ஜூலியாவின் மகன்தான் இந்த சிறுவன் என்று அடித்து கூறியதால், வால்டர் கூறுவது உண்மையா? என்பதை பார்க்க ஜூலியா என்ற பெண்ணிற்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவரின் முன் பாபி போன்று தோற்றம் உடைய ஐந்து சிறுவர்கள் நிறுத்தப்பட்டு அவர்களது கண்கள் கட்டப்பட்டது.

ஆனால் ஜூலியாவால் தன் மகனை கண்டறிய முடியவில்லை. அவர் சிறுவர்களை பார்த்தவுடன் குழப்பமடைந்தார். எனினும் காவல்துறையினர் ஜூலியாவிற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கினர். அதன்படி அதே 5 சிறுவர்கள் முகம் முழுவதும் மூடியபடி ஜூலியா முன் நிறுத்தப்பட்டனர். ஆனால் இந்த முறை ஜூலியா வால்டருடன் இருந்த சிறுவனை (பாபி) தன் மகன் என்று கூறிவிட்டார்.

எனினும் காவல்துறையினர் சந்தேகமடைந்து வழக்கை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். சிறுவன் லேஸ்ஸியை கண்டவுடன் அம்மா என்று அழைத்ததால் சிறுவனை லேஸ்ஸியுடன் அனுப்பியதாக  காவல்துறையினர் கூறினர். நீதிமன்ற தீர்ப்பில் வால்டர் மாயமான சிறுவனை கடத்தியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

அதன்பின்பும் ஜூலியா, சிறுவன் தன் மகன்தான் என்றும் தன்னிடம் வாதாட வழக்கறிஞர் இல்லாததால் என்னால் நிரூபிக்க முடியவில்லை என்றும் கூறிவிட்டு சென்றார். மேலும் இந்த வழக்கு பல வருடங்களாக புரியாமலேயே பாபி வளர்ந்து, பெரியவனாகி, முதியவராகி, பேரன் பேத்திகளை பார்த்துவிட்டு இறந்தும் போனார்.

இந்நிலையில் பாபியின் பேத்தியான மார்கெரெட் டென்பர், தாத்தாவின் கதையை அறிந்து அதனை நிரூபிக்க முயற்சிக்கிறார். இதனால் ஜூலியாவின் வாரிசுகளை தேடிக் கண்டுபிடித்து வழக்கை பற்றி கூறி அவர்களிடமிருந்து தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து பார்த்துள்ளார்.

அதில் ஒரு ஆதாரத்தில், காவல்துறையினரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட வால்டர்  வீட்டின் அக்கம்பக்கத்தினர் பாபி மாயமானதாக கூறப்படும் அந்த நாளுக்கு முன் வால்டருடன் ப்ரூஸ் என்ற சிறுவன் இருந்ததாக கூறியுள்ளனர். இதனால் பாபி தன் தாத்தா தான் என்று நம்பி கொண்டிருந்த மார்கெரெட் குழப்பமடைந்தார்.

எனினும் பல ஆய்வுகள், ஆதாரங்கள் என்று தேடி கொண்டிருந்தவர் டிஎன்ஏ மூலம் கண்டறியலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதன்படி பாபியின் சகோதரரான, ஆலோஸோ டன்பரின் வாரிசுகளின் டிஎன்ஏ பாபியின் டிஎன்ஏவுடன் ஒப்பிட்டபட்டது. முடிவுகள் நெகட்டிவ் என்று வந்தது. அதாவது இருவருக்கும் எந்த இடத்திலும் ஒத்துப்போகவில்லை.

இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் இதில் உள்ள குழப்பம் என்னவென்றால், வால்டருடன் இருந்த சிறுவன் ஜூலியாவின் மகன் என்றால் அவர் எதற்காக லேஸ்ஸியை பார்த்தவுடன் அம்மா என்று ஓடினார். மற்றொன்று ஜூலியா தன் மகனை கண்டுபிடிப்பதில் ஏன் குழப்பமடைந்தார்?. மேலும் வால்டரிடம் இந்த சிறுவன் பாபி இல்லை. எனவே பாபி என்ன தான் ஆனார்? என்ற மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. எதிர்காலத்திலாவது விடை கிடைக்குமா? என்று பார்ப்போம்.

Categories

Tech |