Categories
அரசியல் மாநில செய்திகள்

90-ஸ் கிட்ஸ் என்பதால்…. பேசிட்டு சும்மா போகமாட்டேன்…. நா யார்னு காட்டுறேன்…!!!

90ஸ் கிட்ஸ் என்பதால் பேசி விட்டு சும்மா போக மாட்டேன் யார் என்று காட்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 90-ஸ் கிட்ஸ் என்பதால் நான் பேசிவிட்டு சும்மா போகமாட்டேன். ஒரு இளைஞனாக என்ன செய்ய வேண்டும் என்று காட்டுகிறேன். கேப்டனையும், இந்த கட்சியும் கைவிட்டு விடக் கூடாது. யாராக இருந்தாலும், எந்த கருப்பு ஆடு கட்சியில் இருந்தாலும் சரி, வெளியிலிருந்து பேசினாலும் சரி, யார் நம்முடைய மூளை செலவு செய்தாலும் இந்த கட்சியை விட்டு செல்லக்கூடாது.

இது கேப்டனுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. அவருடைய ஆசை நிறைவேற்ற வேண்டும். அவருடைய பையனுக்கு மட்டுமல்ல, ஒரு தொண்டனுடைய கடமையும் அதுதான். எம்எல்ஏ ஆகணும், எம்பி ஆகனும் என்று இந்த கட்சியை விட்டு போக வேண்டும் என்று நினைத்தால்  இந்த கட்சி அல்ல என் தலைவன் முதல்வராக வேண்டும் ஆரம்பத்திலேயே திமுக அதிமுகவிற்கு ஓட வேண்டியதுதானே என்று கூறியுள்ளார்.

Categories

Tech |