Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்…. பதுக்கி வைத்து விற்கப்பட்ட மதுபாட்டில்கள்…. தப்பி ஓடிய இருவர்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான கோமளவல்லி சப்-இன்ஸ்பெக்டரான ரவிச்சந்திரன் மற்றும் சக காவலர்கள் திடீரென்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழபுரம் கிராமத்தில் வசிக்கும் வேலு, வடிவேல் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மறைவான இடத்தில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் வருவதை பார்த்ததும் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |