Categories
அரசியல் மாநில செய்திகள்

“90% என் பக்கம்தான்”….. பதவிக்கு பலே ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி…. அதிமுகவில் அடுத்த அதிரடி….. ஓபிஎஸ் எடுக்கப் போகும் முடிவு என்ன?….!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி மோதிக் கொள்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரின் பதவி கடந்த 11-ம் தேதியோடு காலாவதியாகிவிட்டது. இதேபோன்று ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பில் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

தற்போது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிமுக கட்சியில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது. அதன் பிறகு 90% பொதுக்குழு உறுப்பினர்கள் தன் பக்கம் தான் இருப்பதாக இபிஎஸ் கூறி வருகிறார். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவை  பொறுத்துதான் அதிமுகவின் தலைமை அதிகாரம் யாருக்கு போகும் என்பது தெரிய வரும்.

அதோடு டெல்லி மேலிடம் தலையிட்டால் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து செயல்படுவார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் பேச்சாக இருக்கிறது. இந்நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதால் இபிஎஸ் இன்னும் சில வாரங்களில் உயர்மட்ட குழுவை கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளாராம். இந்த கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை தொடர்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவது தொடர்பாக சட்ட ஆலோசனைகளையும் நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் எடப்பாடியின் இந்த முடிவுக்கு ஓபிஎஸ் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |