சீன அரசு உலகில் இருக்கும் 90 சதவீத அணு ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளிடம் தான் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.
சீன அரசு தங்கள் நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருகிறது. ஆனால் இந்த ஆயுதங்கள் மூலம் போர் நடத்தும் எண்ணம் எங்களிடம் இல்லை என்று கூறியிருக்கிறது. இந்நிலையில், அணு ஆயுதங்கள் குறித்த வல்லரசு நாடுகளின் மாநாடு நடந்தது. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் பங்கேற்றன.
இதனைத்தொடர்ந்து, சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் உலக அளவில் சுமார் 90% அணு ஆயுதங்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளிடம் இருக்கின்றன. இந்த நாடுகள், அவர்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கட்டாயமாக குறைக்க வேண்டும்.
அமெரிக்கா கூறுவது போல், எங்களுக்கு அணு ஆயுதங்களை அதிகரிக்கும் எண்ணம் மற்றும் திட்டம் இல்லை. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறைவான அணுஆயுதங்களை தான் தயாரித்து வைத்திருக்கிறோம். அந்த அணு ஆயுதங்களை நவீனமயமாக்குவதை மட்டும் தான் செய்து வருகிறோம்.
சீனா, எப்போதும் தைவான் நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல்களை மேற்கொள்ளாது. அணு ஆயுதங்களை, போரில் உபயோகிப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.