Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனாவால்…. இந்தியாவில் 90 பேர் பாதிப்பு – மத்திய அரசு…!!

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் தற்போது வரை மொத்தம் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த அறிக்கையில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 நள்ளிரவு வரை சுமார் 33,000 பயணிகள் பிரிட்டனிலிருந்து பல்வேறு இந்திய விமான நிலையங்களில் இறங்கினர்.

இந்த பயணிகள் அனைவரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களின் நிலைமை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், சோதனை மற்றும் மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்புதல், போன்றவற்றுக்கு மாநிலங்களுக்கு வழக்கமான ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

Categories

Tech |