புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலையை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் 90 சதவீதமாக குறைத்துள்ளது.
தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் புற்று நோய் சிகிச்சைக்கான மருந்துகளை 90 சதவீதமாக குறைத்துள்ளது. இதனால் புற்றுநோயாளிகள் மற்றும் அவர்கள் குடுப்பத்தினர் மலிவான விலையில் மருந்துகள் வாங்கி பயன்பெறுகின்றனர். நுரையீரல் புற்றுநோய்க்கு கிமோதெரபி சிகிச்சைக்கு பயன்படும் இஞ்ஜெக்சன் (500 mg) மருந்து விலை 22,000 ரூபாயில் இருந்து 2,800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே பிரிவில் (100 mg) மருந்தின் விலை 7,700 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்டுள்ள 9 மருந்துகளும் பல்வேறு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் புற்றுநோய்க்கான 42 மருந்துகளின் விலை 3 சதவீதம் வரை குறைக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் தற்போது இரண்டாவது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து மருந்துகளின் உற்பத்தி அளவை குறைக்கக் கூடாது என்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த மருந்துகளின் விலை குறைப்பினால் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22,00,000 த்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள். மருந்து வாங்குவதற்காக அவர்கள் செலவழிக்கும் தொகையும் சுமார் 800 கோடி ரூபாய் வரை குறையும்.