ஊரடங்கை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 90 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பால் கடை, மருந்து கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு கடைவீதி, பஸ் நிலையம், வில்லியனூர், கடலங்குடி, வங்காரி, பட்டவர்த்தி உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 90 வாகனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.