Categories
தேசிய செய்திகள்

துர்கா பூஜையன்று…. ”90 வயது மூதாட்டி பலாத்காரம்”…. 2 இளைஞர்கள் வெறிச்செயல் …!!

வடக்கு திரிபுரா மாவட்டத்தில் காஞ்சன்பூர் பகுதியின் பரால்டி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 90 வயது மூதாட்டியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் காட்டுத்தீ போல் பரவி  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று துர்கா பூஜை என்பதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 35 வயதான அன்ஜன் நாமா என்பவனும் அவனுடைய நண்பனும் நள்ளிரவில்  மூதாட்டியின்   வீட்டிற்குள் நுழைந்து. 90 வயது மூதாட்டியை  பாலியல் பலாத்காரம் செய்தவிட்டு சென்றுள்ளனர். பின்னர் மயக்கத்தில் இருந்து  எழுந்த மூதாட்டி இச்சம்பவம்  குறித்து  பக்கத்து வீட்டு நபர்களிடம்  கூறியுள்ளார்.

இந்நிலையில், மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை இந்த வழக்கு தொடர்பாக காஞ்சன்பூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாமா தலைமறைவாக உள்ளார்.

அன்ஜன் நாமா மிக செல்வாக்கு மிக்க நபர் அவரை எதிர்த்து போராட முடியாது” என்று மூதாட்டி  தெரிவித்தார். இந்த சம்பவம் திரிபுராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |