அரியானா மாநிலம் பானிபட்டில் 900 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நவீன ஆலையை பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக நேற்று நாட்டுக்கு அர்பணித்துள்ளார். அதில் அவர் பேசும்போது கூறியதாவது, உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கான ஒரு பொருள் நமக்கு உயிர் எரிபொருள் என்பதன் பொருள் பசுமை எரிபொருள் சுற்றுச்சூழலை காக்கும் எரிபொருள் என்பது ஆகும்.
இந்த அதிநவீன ஆலையை நிறுவியதன் மூலமாக அரிசி, கோதுமை அதிகமாக விளையும் அறியானாவில் விவசாயிகள் பயிர் கழிவுகளை பயன்படுத்துவதற்கான மற்றொரு லாபகரமான வழியை பெறுகின்றார்கள். பெட்ரோலில் எத்தனாலை கலப்பதனால் கடந்த 7-8 வருடங்களில் சுமார் 50,000 கோடி அன்னிய செலவாணி வெளிநாட்டிற்கு செல்வதிலிருந்து சேமிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆலை அரியானா, டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கின்றது. மேலும் இந்த ஆலை வருடத்திற்கு மூன்று கோடி லிட்டர் எத்தனாலை தயாரிக்க 2 லட்சம் டன் வைகோலை பயன்படுத்துகிறது.
இதனால் பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்கின்றது. அரசியலில் சுயநலம் இருந்தால் யாராவது வந்து இலவச பெட்ரோல், டீசல் தருவதாக அறிவித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த நடவடிக்கைகள் நமது குழந்தைகளின் உரிமையை பறித்து விடும். இத்தகைய சுயநலக் கொள்கைகளால் நாட்டில் நேர்மையாக வழி செலுத்துவோரின் சுமையும் அதிகரிக்கிறது. நாடு எதிர்நோக்கில் சவால்களை சமாளிப்பதற்கு தெளிவான நோக்கங்களும் உறுதிப்பாடும் அவசியமாகும். இதற்கு மிக கடின உழைப்பும் கொள்கையும் திரளான முதலீடுகளும் வேண்டும்.
மேலும் கருப்பு மாயாஜாலம் எல்லாம் மோசமான நாட்களை முடிவுக்கு கொண்டு வந்து விடாது. இவர்கள் எல்லாம் கருப்பு உடைகளை அணிவதால் தங்கள் விரக்தியை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என கருதுகின்றார்கள். ஆனால் மாந்திரீகத்தாலோ, சூனியத்தாலோ, மூடநம்பிக்கையாலோ மக்களின் நம்பிக்கை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.