சீன நாட்டின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங்வம்சம் ஆட்சி செய்த (960-1127) காலக் கட்டத்தில் மரத்தில் உருவாகிய நீண்ட மரப் பாலம் ஒன்று எழுப்பப்பட்டது. இது 98.3 மீட்டர் நீளம் உடையது. இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்த மரப் பாலம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி நடந்தது. சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் முதல் 20 நிமிடத்தில் தீயில் எரிந்ததில் மரப்பாலம் கீழே விழ தொடங்கியது. நீண்ட வளைவுகளை உடைய இந்த பாலம் இயற்கை பேரிடரில் எரிந்திருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி குளோபல்டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இந்த தீவிபத்து மனிதர்களின் தொடர்பினால் ஏற்பட்டிருக்க வேண்டும். நீரின்மேல் அமைந்த அந்த பாலம் தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிந்துள்ளது என்பது மிகஅரிது. பின் 10 மணிநேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முதல் 20 நிமிடத்திலேயே மரப் பாலம் எரிந்துவிழுந்துள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் தனித்துவ மரஅமைப்பு உள்ளிட்டவற்றை கவனிக்கும்போது தீயால் சேதமடைந்து இருக்கும் என்பதில் சந்தேகம் வலுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது வனான் பாலம் என்று பெயரிடப்பட்ட இந்த பாலம் பிரபஞ்சத்தின் அமைதிக்கான பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. கலாசார மதிப்புகொண்ட முக்கியத்துவம் வாய்ந்த, பழமையான மரக் கட்டமைப்பில் உள்ளார்ந்த அறிவு மற்றும் புத்திச்சாலித்தனத்துடன், தொழில்நுட்ப அறிவுடன் வடிவமைத்து இருப்பதுடன், வளைவுகளுடன்கூடிய இந்த அளவு நீளத்துடன் மரப்பாலம் ஒன்றை அமைப்பது என்பது மிக கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைநுட்பம் வாய்ந்த மரத்தில் உருவாகிய உள்ளார்ந்த அறிவை நிரூபிக்கும் அடிப்படையிலான கட்டமைப்பு ஒன்றை நாம் இழந்திருக்கிறோம் என பெகிங் பல்கலை கழகத்தின் பழமையான கட்டமைப்பின் நிபுணர் சூ யிட்டாவோ தெரிவித்துள்ளார்.