மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பைடர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகான் தகட் என்பவர் ஆர்டிஐ அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் பட்ட ஆவணங்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த ஆவணங்களை பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியது. இந்த பணத்தை மகான் கட்டி 2 மாதங்களான நிலையில் நகராட்சி நிர்வாகம் ஆவணத்தை வழங்காமல் இருந்துள்ளது.
இதனால் இது தொடர்பாக மகான் நகர்ப்புற நிர்வாக துறையில் புகார் கொடுத்தார். இந்த புகாரை அடுத்து நகராட்சிக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்கும்படி உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகான் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மேல தாளம் வழங்க மாட்டு வண்டியில் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது 9000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நகராட்சி அலுவலர்கள் வழங்க அதை தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் மகான் மாட்டு வண்டியில் ஏற்றி அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகிய
வைரலாகி வருகிறது.