கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு 90 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதற்கான இதை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ள நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கூறியுள்ளது. இவ்வறிக்கை பற்றி ஏர் இந்தியா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்றினால் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருகின்றனர். கொரோனா தொற்றினால் உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு கட்டாயமாக இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.
அவ்வகையில் கொரோனா பாதிப்பால் நிரந்தர ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்தால் 5 லட்ச ரூபாயும், ஒரு வருடமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்” என அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா சார்பாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது அதிகாரப்பூர்வமான முறையில் வெளியிடப்படவில்லை. ஏர் இந்தியா நிறுவனத்தினை சேர்ந்த 10-ற்கும் மேலான ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் எனவும் 200-க்கும் மேலான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.