திரிஷ்யம் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மோகன்லால் மீனா நடிப்பில் சென்ற 2013 ஆம் வருடம் 5 கோடி செலவில் தயாராகி வெளியான திரைப்படம் திரிஷ்யம். இத்திரைப்படம் தமிழில் பாபநாசம் என கமல் நடிப்பில் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் பின்னர் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் மூன்றாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தயாரிப்பாளர் மூன்றாம் பாகம் வரும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான கிளைமாக்ஸ் என்னிடம் இருக்கின்றது. இதனால் மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கின்றேன். இப்படம் விரைவில் தயாராகும் என தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.