Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாரம்பரிய நாட்டு ரக அவரை சாகுபடி…. தோட்டக்கலைத்துறை மானியம்…!!!

பாரம்பரிய நாட்டு அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலமாக மானியம் வழங்கப்படுகின்றது.

நமது முன்னோர்கள் ஒவ்வொரு மண் வளத்திற்கும் ஏற்ற வகையில் விதைகள், பருவத்திற்கேற்ற விதைகள், வரட்சியான பகுதிக்கேற்ற விதைகள் என பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ப விதைகளை பயன்படுத்தி வந்தார்கள். இதனால் எந்த இழப்பும் இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போதைய விவசாயத்தில் மகசூல் எந்த அளவிற்கு கிடைக்கின்றதோ அந்த அளவிற்கு பாதிப்பு கிடைக்கின்றது.

ஆகையால் இயற்கையோடு இணைந்து வாழ்வதில் ஆர்வம் காட்டும் பலரும் பாரம்பரிய ரக பயிர்களை தேடி பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். அந்த வகையில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுப்பதில் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து தமிழக அரசு கைகொடுத்து வருகின்றது. அதற்காக மானிய விலையில் விதைகள் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பாரம்பரியராக அவரை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 20000 மதிப்புள்ள இயற்கை இடுபொருட்கள் வழங்கப்பட இருப்பதாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கூறியுள்ளார்.

Categories

Tech |