மாநில தடகள போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு எம்எல்ஏ 20,000 நிதி உதவி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சாந்தி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பங்கேற்றார்.
பின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் மாநில அளவிலான தடகளைப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த பள்ளி மாணவி ராதிகாவுக்கு ரூ.20,000 எம்எல்ஏ வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர், பேரூராட்சி மன்ற தலைவர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.