நடிகை ரஞ்சிதாவின் கணவர் உருக்கமாக சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் ஒருவராக ரச்சிதா பங்கேற்று இருக்கின்றார். இவர் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது அதில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில மாதமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகர் தினேஷ் தனது இணையதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, இதுபோல மேலும் பல இதயங்களை வென்றிடுங்கள். நீங்கள் விசுவாசமற்ற நண்பர்கள், தேவையற்றவர்களை எல்லாம் தவிர்த்து விட்டால் கடைசியில் வெற்றி பெறுவீர்கள். எல்லோரையும் போல உங்கள் வெற்றியை பார்க்க காத்திருக்கின்றேன் என குறிப்பிட்டு இருக்கின்றார். மேலும் Stand for Rachitha, My vote for Rachitha என பதிவிட்டு இருக்கின்றார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பதிவை எல்லாம் பார்த்தால் ரச்சிதா மீண்டும் உங்களுடன் சேர்ந்து விடுவார் போல என கூறி வருகின்றார்கள். ரச்சிதாவுக்கு ரூட்டு விட்டு வந்த ராபர்ட் மாஸ்டரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் குறிப்பிடத்தக்கது.