Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஏ.டி.எம்மில் கூடுதலாக கிடைத்த பணம்… நேர்மை தவறாத மேஸ்திரி… வங்கி மேலாளர் பாராட்டு..!!!!

ஏடிஎம் மையத்தில் கூடுதலாக கிடைத்த 2000 ரூபாயை மேஸ்திரி வங்கியில் ஒப்படைத்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் சாத்கர் கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர் நேற்று முன்தினம் மாலை ஐந்து மணிக்கு பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அவர் அங்கே 2000 எடுப்பதற்காக தொகையை பதிவு செய்வதற்கு கூடுதலாக 2000 என 4000 வந்திருக்கின்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கி சேமிப்பு கணக்கை சரிபார்த்தபோது அவ்வளவு பணம் இல்லை என்பது தெரிய வந்தது. இதை அடுத்து பேரணாம்பட்டில் இருக்கும் வங்கிக்கு சென்று மேலாளரிடம் ஏடிஎம்மில் பணம் எடுத்த போது கூடுதலாக 2000 வந்ததாக கூறி பணத்தை ஒப்படைத்தார். மேலாளர் பணத்தைப் பெற்றுக் கொண்டு வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் முன்பாக கட்டிட மேஸ்திரியின் நேர்மையை பாராட்டினார்.

Categories

Tech |