லோகேஷ் கனகராஜ்-விஜய் இணையும் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார்.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் தகவல்கள் கேட்டு வருகின்ற நிலையில் லோகேஷ் எந்த ஒரு தகவலையும் சொல்லாமல் இருக்கின்றார்.
இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திரைக்கதை எழுதும் பணிகளை லோகேஷ் கனகராஜ் முடித்து விட்டதாகவும் இத்திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை வருகின்ற டிசம்பர் 5-ம் தேதி நடக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.