நடிகை ஸ்வேதா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை ஸ்வேதா பண்டேகர் சந்திரலேகா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் 8 ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இது சில மாதங்களுக்கு முன்பாக முடிவடைந்தது. இந்த நிலையில் தனது அடுத்த ப்ராஜெக்ட்க்கான கதை குறித்து அறிவிப்பு வெளியீடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் அதற்கு மாறாக இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றார்.
தனது காதல் குறித்த அப்டேட் கொடுத்திருக்கின்றார் ஸ்வேதா. அவர் தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து என் இதயம் நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்து போனது. அதை தற்போது கண்டுபிடித்து விட்டேன் என்பதை பதிவிட்டு இருக்கின்றார். ஆனால் இப்புகைப்படத்தில் ஸ்வேதாவின் காதலர் பின்னால் திரும்பி நின்று கொண்டிருக்கின்றார். இதனால் அவர் யார் என தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் ரசிகர்கள் யார் யார் என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.