ரயில்களில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா என விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றார்கள்.
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நலனை கருதி ரயில்வே வாரியம் சார்பாக டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது மூன்று மாதங்கள் ரயில் சேவை முடங்கியது.
இதனால் வருவாய் இழப்பை சமாளிப்பதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து நாடு முழுவதும் ரயில் சேவை வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றார்கள்.