Categories
தேனி மாவட்ட செய்திகள்

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில்… பாறைகளை அகற்ற வேண்டும்… வாகன ஓட்டிகள் கோரிக்கை..!!!

விபத்து ஏற்படுத்தும் பாறைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் லோயர் கேம்ப் இருக்கின்றது. இங்கே போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகள் இருக்கின்றது. குமிளி செல்வதற்கு வனப்பகுதியில் ஆறு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்திருக்கின்றது. இந்த மலைப்பாதையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளும் சில இடங்களில் சாலைகள் குறுக்கலாகவும் இருக்கின்றது. சில இடங்களில் பெரிய பாறைகள், மரங்கள் சாலையில் உருண்டு செல்லும் நிலையில் இருக்கின்றது.

அதில் இரண்டாவது மேம்பாலத்திலிருந்து இரைச்சல் பாலம் செல்லும் வழியில் பெரிய பாறை ஒன்று அங்கிருக்கும் மரத்தின் பிடியில் சிக்கி இருக்கின்றது. மழை பெய்யும் போது மண் சரிவு ஏற்பட்டாலும் மரம் முறிந்து விழுந்தாலோ அந்த பெரிய பாறை சாலையில் விழுந்துவிடும். இதனால் பெரிய விபத்து நிகழும். ஆகையால் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே பெரிய பாறையை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆகியோர்  வனத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

Categories

Tech |