புதிய தார் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் அருகே இருக்கும் முக்காணி ரவுண்டானா அருகில் இருந்து கொற்கை விலக்கு வரை புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு 1 1/4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை ஏற்று கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், திமுக செயலாளர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்கள், ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.