போதை ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு முகாம் சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு மற்றும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தாராபுரம் வட்டம் சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு உள்ளிட்டோர் தலைமை தாங்கி உரையாற்றினார்கள்.
அவர்கள் சட்டம் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விரிவாக பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு நீதிபதிகள் பதிலளித்தார்கள். பின் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.