Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரணாவத்?… அட இது உண்மைதாங்கோ..!!!!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகி வேடத்தில் நடிக்கின்றார்.

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க கமிட்டானார். அத்துடன் லைகா நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள்.

படப்பிடிப்பு சென்ற சில மாதங்களுக்கு முன்பாக மைசூரில் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என வாசு தொடர்ந்து பரிசீலனையில் இருந்து வந்த நிலையில் பல நடிகைகளின் பெயர் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கங்கனா ரனாவத் ஹீரோ இருக்கும் கதையில் நடிப்பாரா என முதலில் இயக்குனர் தயங்கி வந்தாராம். ஆனால் கதை கூறிய உடனே கங்கனா அந்த ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

Categories

Tech |