Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஸ்கர் விருதுக்கே தேர்வாகல… ஆனா… நியூயார்க் திரைபட விமர்சகர்கள் வட்டம் விருதுக்கு ராஜமவுலி தேர்வு..!!!

நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் விருதுக்கு ராஜமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் என்ற குழு சென்ற 88 வருடங்களாக இயங்கி வருகின்றது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பத்திரிக்கை நிறுவனங்களில் பத்திரிக்கையாளர்கள் அந்த குழுவில் இடம் பெற்று இருக்கின்றார்கள். விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் இந்த குழு முதலாவதாக விருதுகளை அறிவித்திருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு திரைப்படமான ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்ககான விருது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பாக ஆர் ஆர் ஆர் திரைப்படம் தேர்வாகவில்லை. இந்த நிலையில் தற்போது ராஜமௌலிக்கு இப்படி ஒரு விருது அறிவிக்கப்பட்டிருக்கின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜ மௌலிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆஸ்கர் விருதுக்கான தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றார்கள்.

Categories

Tech |