Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

புது பொலிவுடன் மீண்டும் “பாபா”… டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்…!!!!

புது பொலிவுடன் ரிலீசுக்கு தயாராகி உள்ள பாபா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ .ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை.

இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் பொலிவுடன் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. இப்படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புதிதாக மறு தொகுப்பு செய்யப்பட்டிருக்கின்றது. படத்தில் டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டிருப்பதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தர இருக்கின்றது. இந்த நிலையில் பாபா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதனை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படம் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |